உலகத் தடகள சாம்பியன்ஷிப் ஈட்டி எறிதல் இறுதிச்சுற்றில் தங்கம் வென்று சாதனைப் படைத்த இந்தியாவின் நீரஜ் சோப்ராவிற்கு கழகப் பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் தனது அதிகாரப் பூர்வ டிவிட்டர் பக்கத்தில் வாழ்த்துகளை தெரிவித்தார். அது பின்வருமாறு உள்ளது.
ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்ட் நகரில் நடந்துவரும் உலகத் தடகள சாம்பியன்ஷிப் ஈட்டி எறிதல் இறுதிச்சுற்றில் தங்கம் வென்று சாதனை படைத்திருக்கும் திரு. நீரஜ் சோப்ரா அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள். உலகத் தடகள சாம்பியன்ஷிப் வரலாற்றில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றிருக்கும் திரு. நீரஜ் சோப்ரா அவர்கள், மென்மேலும் பல சாதனைகள் புரிந்து தாய் நாட்டிற்கு பெருமை சேர்க்க வாழ்த்துகிறேன்.
ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்ட் நகரில் நடந்துவரும் உலகத் தடகள சாம்பியன்ஷிப் ஈட்டி எறிதல் இறுதிச்சுற்றில் தங்கம் வென்று சாதனை படைத்திருக்கும்
திரு. நீரஜ் சோப்ரா அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.உலகத் தடகள சாம்பியன்ஷிப் வரலாற்றில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையைப்… pic.twitter.com/kLmaFtjmuK
— Edappadi K Palaniswami (@EPSTamilNadu) August 28, 2023