கோதாவரி- காவிரி இணைப்புத் திட்டத்தை விரைவாக செயல்படுத்த மத்திய அரசிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
73-வது சுதந்திர தின விழாவில் நாட்டு மக்கள் மத்தியில் பல்வேறு கருத்துகளை பேசிய முதலமைச்சர் பழனிசாமி, 40 ஆயிரத்தி 941 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் 2-ம் கட்டத்தை செயல்படுத்த அரசு நிர்வாக அனுமதி அளித்துள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை 20 ஆயிரத்து 196 கோடி ரூபாய் நிதியுதவி வழங்க ஒப்புதல் அளித்துள்ளதாகவும் முதல்வர் குறிப்பிட்டார். இத்திட்டப் பணிகள் விரைவில் தொடங்கப்படும் எனவும் அவர் கூறினார்.
கோதாவரி- காவிரி இணைப்புத் திட்டத்தை விரைவாக செயல்படுத்த மத்திய அரசிடம் வலியுறுத்தப்பட்டுள்ளதாக கூறிய முதலமைச்சர், காவிரி ஆற்றை சீரமைக்க நடந்தாய் வாழி காவிரி என்ற திட்டத்தை செயல்படுத்தி வருவது போன்ற தமிழகத்தில் உள்ள மற்ற ஆறுகளையும் தூய்மைப்படுத்தும் நடவடிக்களை அரசு மேற்கொள்ளும் என்று கூறினார்.