சென்னையில் நவீன வசதியுடன் பெண்கள் விடுதி கட்டப்படும் : அமைச்சர் சரோஜா

மத்திய அரசு மற்றும் உலகவங்கியுடன் இணைந்து தமிழகத்தில் 4 இடங்களில் நவீன வசதிகளுடன் உலகத்தரம் வாய்ந்த பெண்கள் தங்கும் விடுதிகள் கட்டப்பட உள்ளதாக சமூகநலத்துறை அமைச்சர் சரோஜா தெரிவித்துள்ளார்.

சென்னை வடபழனியில் சமூக நலத்துறையின் கீழ் செயல்படும் பெண்கள் தங்கும் விடுதியினை அமைச்சர் சரோஜா ஆய்வு செய்த பின் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, 6 ஏக்கர் பரப்பளவில் உலகத்தரத்தில், 28 கோடி ரூபாய் மதிப்பில் பெண்கள் தங்கும் விடுதி கட்டப்பட உள்ளது எனவும் மத்திய அரசு மற்றும் உலக வங்கியும் சேர்ந்து இந்த திட்டத்தை செயல்படுத்த உள்ளதாக கூறினார்.

Exit mobile version