குடும்பத்துல இருக்க சனாதனத்தை ஒழிச்சுட்டு வாங்க உதயநிதி!

பிரம்மாண்டமான முறையில மதுரைல அதிமுக பொன்விழா எழுச்சி மாநாடு நடந்த காரணத்துனால, எதைத் திண்ணா பித்தம் தெளியும்ன கதையா, மதுரைல நாமளும் எதாச்சும் ஒரு மீட்டிங் நடத்துனுமேனு கடமைக்கு ஒரு கூட்டத்துக்கு கூட்டியிருக்காங்க விடியா திமுககாரங்க. கட்சியோட சீனியர் டி.ஆர்.பாலு வார்னிங் குடுத்து கூட அடங்காத உதயநிதி, இன்னும் அந்த சனாதானம் டாபிக்க புடிச்சே தொங்கிட்டு இருக்காரு. இந்த மீட்டிங்கலயும் பேசுறதுக்கு வேற டாபிக் இல்லாம, பட்டியலின பெண்ணுங்குற காரணத்தால குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை கூப்பிடாம நாடாளுமன்றக் கட்டிடத்தை திறந்துட்டாங்கனு கதறிட்டு இருந்திருக்காரு. அட அதை விடுங்க… உங்க அத்தை கனிமொழிக்கு கட்சியில குடுத்திருக்க மரியாதைய பத்திதான் ஊரே பேசிட்டு இருக்கே. ஒரு பக்கம் மேடைல எல்லாம், “எனக்கு வாய்த்த தாய், மனைவி, மகள் மாதிரி அருமையான பெண்களை பாத்தது இல்லனு” பேசுற ஸ்டாலின் வெவரமா கனிமொழி பேர அவாய்ட் பண்றாரு. நீங்க என்னடானா கட்சியில உங்க அத்தை வளர்ந்திடக் கூடாதுனு தென் மாவட்டங்கள்ல அவங்களுக்கு எதிரா உள்ளடி வேலை பாத்துட்டு இருக்கீங்க. சொந்த குடும்பத்துல இருக்க ஒரு பெண், அதும் கட்சித் தலைவருக்கு தங்கையாவும், உங்களுக்கு அத்தையாவும் இருக்க ஒரு பெண் வளர்ந்திடக் கூடாதுனு இவ்ளோ தகிடுதத்தோம் பண்ணிட்டு சனாதனத்தை பத்தி எல்லாம் நம்ம பேசலாமா பாஸ்னு… நாங்க சொல்லல… ஊருக்குள்ள பேசிக்கிறாங்க…

Exit mobile version