விழுப்புரம் மாவட்டத்தில் திமுகவைச் சேர்ந்த கஞ்சா போதை ஆசாமிகளால் கொல்லப்பட்ட மளிகைக்கடை ஊழியர் இப்ராஹிம் சஞ்சி வீட்டிற்கு சென்று அதிமுக மாநிலங்களவை எம்பி சி.வி.சண்முகம் இரங்கல் தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் இந்தக் கொலை சம்பவம் குறித்து பேசினார்.
திமுக போதை ஆசாமிகளின் வெறிச்செயல்
திமுக பதவியேற்றதிலிருந்து தொடர்ந்து கொலை சம்பவங்கள் தமிழகத்தில் நிகழ்த்தப்பட்டு வருகின்றன. நேற்றைய முன்தினம் விழுப்புரம் நகர்ப்பகுதியில் போதை ஆசாமிகளிடமிருந்து பெண் ஒருவரை காப்பாற்ற நினைத்து உதவிய இப்ராஹிமை அவர்கள் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளனர். இதனை முதலமைச்சர் சட்டசபையில் வெறும் குடும்பப் பிரச்சினை என்று கூறினார். ஆனால் அந்த போதை ஆசாமிகள் நெற்றைய முன் தினம் மாலை 4 மணியிலிருந்து விழுப்புரம் நகர்ப்பகுதியில் அராஜகத்தில் ஈடுபட்டு வந்தனர். ஏஜிஎஸ் திருமண மண்டப மேலாளரை முதலில் தாக்கியிருக்கின்றனர். பின்னர் தீபக் எனும் சாமானியரைத் தாக்கியுள்ளனர். இதற்கு காவல்துறையிடம் இருந்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பின்னர் தான் இப்ராஹிமை குத்திக் கொலை செய்துள்ளனர். இராஜசேகரன், வல்லரசு என்கிற பெயரைக் கொண்ட அந்த ஆசாமிகள் மீது ஏன் எந்த நடவடிக்கையும் காவல் துறை எடுக்கவில்லை என்றால் அவர்களிருவரும் திமுகவினைச் சேர்ந்தவர்கள். அவர்கள் இப்ராஹிமைக் குத்தும்போது கூட முதலமைச்சர் ஸ்டாலினின் முகப்புப்படம் போட்ட பனியன்களை அணிந்திருந்தனர்.
அதிமுக ஒரு லட்சம் உதவித்தொகை
இறந்தவரின் குடும்பத்திற்கு அதிமுக சார்பாக பொதுச்செயலாளர் அவர்கள் ஒரு லட்சம் ரூபாய் உதவித் தொகையினை எனது (சிவி சண்முக) வாயிலாக தந்துதவினார். ஆனால் சட்டசபையில் பாதிக்கப்பட அச்சிறுபானமையினரின் குடும்பத்திற்கு உதவித்தொகை அளிக்க முதல்வருக்கு எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்தியும் அதைப் பற்றி சட்டைகூட திமுகவினர் பண்ணவில்லை. ஆனால் எதற்கெடுத்தாலும் சிறுபான்மையினரின் காவலர் என்றும், சமூகநீதியினைக் காத்தவர் என்றும் புகழாரம் மட்டும் முதலமைச்சர் சூட்டிக்கொள்கிறார்.
திமுகவின் கஞ்சா சாக்லேட் சாதனை
ஆட்சிப் பொறுபேற்ற 22 மாதங்களில் திமுக தன்னுடைய பழைய முகத்தை மீண்டும் காட்டுகிறது. மேலும் காவல்துறை செயலிழந்துள்ளது. காவல்துறையினர் சிறப்பாக செயல்படக்கூடியவர்கள் தான், ஆனால் அவர்களை வழிநடத்த சரியான முதல்வர் தமிழகத்தில் இல்லை. காவல்துறையின் கைகள் கட்டப்பட்டுள்ளது. முதலமைச்சர் போன்று பொம்மையாக விழுப்புரம் டிஜிபி உள்ளார். கஞ்சா, போதைப்பொருட்கள், ரவுடிசம் போன்றவற்றை காவல்துறையினர் விரைவில் கட்டுப்படுத்த வழிவகை செய்ய வேண்டும். மேலும் இந்த திமுகவின் ஆட்சிகாலத்தில் அவர்களின் பிரதான சாதனையாக கஞ்சா சாக்லேட் உற்பத்தியினை சொல்லலாம் என்று கூறினார் எம்பி சிவி சண்முகம்.
Discussion about this post