கங்கை நீர் குடிப்பதற்கும், குளிப்பதற்கும் ஏற்றதல்ல :மாசு கட்டுப்பாட்டு வாரியம்

கங்கை நீர், குடிப்பதற்கும், குளிப்பதற்கும் ஏற்றதல்ல என்று மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

புண்ணிய நதிகளில் ஒன்றாக விளங்கும் கங்கை, மிகுந்த மாசடைந்துள்ளதாகவும், அதை நேரடியாக, குடிக்கவோ, குளிக்கவோ பயன்படுத்த முடியாது என்றும் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கங்கை நதி பாயும் வழியில், 86 இடங்களில் கண்காணிப்பு மையம் அமைத்து, அங்குள்ள நீரை பரிசோதனை செய்ததில், 78 இடங்களில் இருந்த நீர் மிகவும் மோசமாக உள்ளது கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கங்கை நதி முழுவதும் வீரியம் மிகுந்த பாக்டீரியாக்கள் உள்ளதும் தெரியவந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

அதனால் கங்கை நீரை குடிக்கவும், குளிக்கவும் பயன்படுத்த முடியாது என்று மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. மேற்கு வங்கத்தின் 2 இடங்கள் மற்றும் உத்தரகாண்ட் மாநிலத்தின் சில இடங்களில் மட்டும் கங்கை நீரை சுத்தப்படுத்திவிட்டு பருகலாம் என்றும், கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்ட 86 இடங்களில் வெறும், 18 இடங்களில் மட்டும் குளிப்பதற்கு ஏற்ற சூழல் நிலவுவதாகவும், மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் கூறியுள்ளது.

Exit mobile version