2020 ஆண்டு மார்ச் மாதத்துக்குள் கங்கை தூய்மையாகும் : நிதின் கட்காரி

2020 ஆண்டு மார்ச் மாதத்துக்குள் கங்கை தூய்மையாகும் என மத்திய போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்காரி நம்பிக்கை தெரிவித்துள்ளார். மராட்டிய மாநிலம் நாக்பூரில் பாஜக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய மத்திய அமைச்சர் நிதின் கட்காரி, கங்கை நதியை சுத்தம் செய்வதற்காக 26 ஆயிரம் கோடி ரூபாயில் திட்டம் தயாரிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருவதாக கூறினார்.

இதுவரை கங்கையை சுத்தம் செய்யும் பணி 10 சதவீதம் மட்டுமே நடந்து உள்ளதாக கூறிய அவர், இந்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் 40 சதவீதம் வரை சுத்தம் செய்யும் பணி நிறைவடையும் என நிதின் கட்காரி தெரிவித்தார்.

கங்கை மட்டுமன்றி அதன் கிளை நதிகளையும் சுத்தம் செய்யும் பணி தீவிரமாக நடந்து வருவதாகவும், 2020 ஆண்டு மார்ச் மாதத்துக்குள் 100 சதவீதம் கங்கை நதி தூய்மையாகும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

Exit mobile version