‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ நடிகருக்கு கொரோனா பாதிப்பு!

உலகம் முழுவதும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற ‘கேம் ஆப் த்ரோன்ஸ்’ தொடரில் நடித்த கிறிஸ்டோபர்  ஹிவ்ஜூ-க்கு நேற்று கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அதில், அவருக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனை அடுத்து அவரும், அவரது குடும்பத்தினரும் தனிமைப்படுத்தப்பட்டு, மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதேபோல், மற்றொரு ஹாலிவுட் நடிகரான இட்ரிஸ் எல்பாவுக்கும் (IDRIS ELBA) கொரோனா பாதிப்பு உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கும் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ், தோர், பசிஃபிக் ரிம் உள்ளிட்ட படங்களில் இட்ரிஸ் எல்பா நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version