அக்டோபர் 12, 2012 ஆம் ஆண்டும் வெறும் ஒரு லட்ச ரூபாயில் தொடங்கப்பட்டதுதான் ஜி ஸ்கொயர் நிறுவனம். தற்போது அசூர வளர்ச்சி அடைந்திருப்பதன் பின்னணி என்ன?
ஜி ஸ்கொயர்
2012 ல் ஆரம்பிக்கப்பட்ட ஜி ஸ்கொயர் வெறும் ஒரு லட்ச ரூபாய் மதிப்பீட்டில் ஆரம்பிக்கப்பட்டது. 2020 ஆம் ஆண்டு 7 கோடி ரூபாய் நஷ்டம் அடைந்துள்ளது என்று ஆர்.ஓ.சி தாக்கல் செய்தது. பின்னர் 2021 மார்ச் மாதம் ஒட்டி 8 கோடி ரூபாய் நஷ்டம் அடைந்துள்ளது என்று தாக்கல் செய்தது. ஆனால் என்றைக்கு திமுக ஆட்சிக் கட்டிலில் ஏறியதோ அன்றிலிருந்து தொடங்கியது ஜி ஸ்கொயரின் ஆட்டம். அந்நிறுவனத்தின் சிஇஓ ஈஸ்வரன் திமுக ஆட்சியைப் பிடித்து சில நாட்களில் ஒரு தகவலை சொன்னார். ”எங்கள் நிறுவனத்தின் டேர்ன் ஓவர் 2000 கோடி மற்றும் projection 4000 கோடி” என்று கூறியிருந்தார். இது எப்படி சாத்தியம். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வெறும் 56 கோடி வருமான மதிப்பீட்டில் இருந்த நிறுவனம், தற்போது 350000 கோடி ரூபாய் வரை ஈட்டிய பின்னணி என்ன? இதற்கான பதில் திமுகவிற்கும், ஸ்டாலினுக்கும், சபரீசனுக்கும் மட்டுமே தெரிந்த உண்மை.
யாரிந்த ராமஜெயம் என்கிற பாலா!
ஜி ஸ்கொயரின் இயக்குநராக ஸ்ரீகலா மற்றும் ராமஜெயம் ஆகிய இருவர் உள்ளனர். தற்போது வருமான வரித்துறை ராமஜெயத்தின் வீட்டிலும் ரெய்டு மேற்கொண்டுள்ளது. ராமஜெயம், பாலா என்கிற புனைப்பெயரை தனக்கு சூட்டிக்கொண்டார். அதற்கு காரணம் அவர் திருப்பூரில் செய்த சில சம்பவங்கள். ராமஜெயம் என்று சொன்னால் இவரைப் பற்றி யாருக்கும் தெரியாது, பேபி எலக்ட்ரானிக்ஸ் ராமஜெயம் என்று சொன்னால்தான் தெரியும். இன்றைக்கு சில தனியார் எலக்ட்ரானிக்ஸ் & ஃபர்னிச்சர்ஸ் கம்பெனிகள் என்ன செய்ததோ அதை அவர் எப்போதோ செய்யத் தொடங்கிவிட்டார். வீட்டிற்கே சென்று ஏசி, ப்ரிட்ஜ் போன்ற சாதனங்களை சப்ளை செய்வது போன்ற பெரிய நிறுவனமாக திருப்பூரில் வலம் வந்துகொண்டிருந்தார். ஒரு கடன் பிரச்சினையால் திருப்பூரைவிட்டு ஓடிய அவர், சென்னையில் பாலா என்கிற புனைப்பெயரில் வாழ்ந்து வந்தார். பின்னர் ஜி ஸ்கொயரின் நிலங்களை மேற்பார்வையிடும் பிறகு வாங்கிப்போடும் ஆளாக மாறினார். இப்படிப்பட்டவர்களைக் கொண்டுதான் இந்த ஜி ஸ்கொயர் நடக்கிருக்கிறது.
திமுக ஐடி விங் து.தலைவர் வீட்டில் ஐடி ரெய்டு!
திமுகவிற்கும் ஜி ஸ்கொயருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை சில செய்திகள் வெளிவரும் வேளையில் தொடர்ந்து திமுக தொடர்புடைய ஆட்கள் வீடுகளிலும் பங்களாக்களிலும் ஐடி ரெய்டு நடைபெற்று வருவது கவனிக்கத்தக்க ஒன்று. உண்மை என்னவென்றால் திமுகவின் பணம் ஜி ஸ்கொயரில் உள்ளது என்று பல செய்திகள் வெளிவருகின்றன. திமுக எம் எல் ஏ மோகனின் மகன் மற்றும் திமுக ஐடி விங் துணைத்தலைவரான அண்ணாநகர் கார்த்திக்கிற்கு சொந்தமான பங்களாவில் ஐடி ரெய்டு நடைபெற்றுள்ளது. அவரும் இந்த ஜி ஸ்கொயர் நிறுவனத்தில் பங்குதாரர். கிட்டத்தட்ட ஜி ஸ்கொயருக்கு சொந்தமான 50க்கு மேற்பட்ட இடங்களில் ரெய்டு நடைபெற்று வருகிறது. சென்னையில் ஈசிஆர், ஓஎம்ஆர் போன்ற இடங்களில் தெருவுக்கு ஒரு நிலத்தை வாங்க வேண்டும் என்றாலும் அது ஜி ஸ்கொயரிடம்தான் வாங்க வேண்டிய நிர்பந்தத்தில் உள்ளார்கள் பொதுஜனங்கள். இதன் மூலம் திமுக பொதுமக்களைவிட தன் மக்களுக்குதான் சாதகாமக இருக்கும் என்கிற தொடர்கதை மீண்டும் மீண்டும் நிரூபணம் ஆகிறது.
Discussion about this post