தமிழகத்தில் 71 லட்சம் மரக்கன்றுகள் நடுவதற்கு நிதி ஒதுக்கீடு

தமிழகம் முழுவதும் 71 லட்சம் மரக்கன்றுகள் நடுவதற்கான மெகா திட்டத்திற்கு 198 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 71-வது பிறந்த நாளையொட்டி, தமிழகம் முழுவதும் 71 லட்சம் மரக்கன்றுகள் நடப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன் தொடர்ச்சியாக மரக்கன்று நட்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இந்த திட்டத்தினை தொடங்கி வைத்தார். இந்த நிலையில், தற்போது தனியார் பள்ளி, கல்லூரிகள், பூங்காக்கள், அரசு அலுவலகங்கள், வனப்பகுதிகள் என அனைத்து இடங்களிலும் 71 லட்சம் மரக்கன்றுகளை நட்டு, பசுமையை உருவாக்க தமிழக அரசு, 198 கோடியே 57 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கி அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த பணிகளை விரைந்து முடிக்கவும் உத்தரவிட்டப்பட்டுள்ளது.

Exit mobile version