ஆரணி பகுதி மக்களின் 60 ஆண்டு கோரிக்கையான, நடுப்பட்டு மற்றும் கோணையூர் கிராமத்தை இணைத்து, தனி ஊராட்சியாக அறிவிக்க மாவட்ட நிர்வாகம் ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து, மகிழ்ச்சியடைந்த மக்கள் அரசிற்கு நன்றி தெரிவித்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி ஊராட்சிக்குட்பட்ட நடுப்பட்டு மற்றும் கோணையூர் ஆகிய பகுதிகளை இணைத்து தனி ஊராட்சியாக அறிவிக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாக இருந்தது. இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் கே.எஸ். கந்தசாமி மற்றும் ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.
இந்நிலையில், அம்மக்களின் 60 ஆண்டு கால கோரிக்கையான நடுப்பட்டு மற்றும் கோணையூர் கிராமத்தை இணைத்து தனி ஊராட்சியாக அறிவிக்க மாவட்ட ஆட்சியர் கந்தசாமி ஒப்புதல் அளித்தார். இதனால் மகிழ்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், ஆட்சியருக்கும், தமிழக அரசிற்கும் உளமார்ந்த நன்றியை தெரிவித்தனர்.
Discussion about this post