நீலகிரி மாவட்டம் குன்னூரில் 61வது பழக்கண்காட்சியை மாவட்ட வருவாய்த்துறை அலுவலர் செல்வராஜ் துவக்கி வைத்தார்.
நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க கோடை விழா நடத்தப்படுகிறது. இந்த கோடை விழா குன்னூரில் நடைபெறும் பழக்கண்காட்சியுடன் நிறைவு பெறுகிறது. குன்னூர் சிம்ஸ் பூங்காவில் நடைபெறும் 61வது பழக்கண்காட்சியை மாவட்ட அலுவலர் செல்வராஜ் துவக்கி வைத்தார். பூங்காவில் ஒன்றறை டன் பழங்களைக் கொண்டு சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக வண்ணத்துப்பூச்சி, மாட்டுவண்டி, மயில், அசோக சக்கரம் போன்றவை அமைக்கப்பட்டுள்ளது. மலைப்பிரதேசங்களில் விளையக்கூடிய பழங்களான பிளம்ஸ் , பேரி, துரியன் போன்ற நூற்றுக்கும் மேற்பட்ட பழங்கள், இக்கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன. இதனை ஏரளமான சுற்றுலா பயணிகள் கண்டுகளித்தனர்.