திருவள்ளூரிலிருந்து திருப்பதி மற்றும் நெல்லூருக்கு 11 புதிய குளிர்சாதனப் பேருந்து இயக்கத்தை அமைச்சர்கள் பென்ஜமின் மற்றும் பாண்டியராஜன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, தமிழக முதலமைச்சரின் உத்தரவின் பேரில் 3 கோடியே 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 11 புதிய குளிர்சாதனப் பேருந்துகளின் துவக்க நிகழ்ச்சி இன்று திருவள்ளூரில் நடைபெற்றது.
இதில் சென்னையிலிருந்து திருப்பதிக்கு, திருவள்ளூர், திருத்தணி வழியாக 4 புதிய குளிர்சாதனப் பேருந்துகளும், காளாஸ்திரி வழியாக 2 பேருந்துகள் என 6 பேருந்துகள் தொடங்கப்பட்டது. சென்னையிலிருந்து நெல்லூருக்கு 5 புதிய குளிசாதனப் பேருந்துகளும் தொடங்கப்பட்டது.
மாவட்ட ஆட்சியர் மகேஷ்வரி ரவிக்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் பெஞ்ஜமின் மற்றும் பாண்டியராஜன் ஆகியோர் கலந்துகொண்டு புதிய குளிர்சாதனப் பேருந்துகளை தொடங்கி வைத்தனர்.
Discussion about this post