மதுபோதையில் மாறி மாறி மண்டையை உடைத்து கொண்ட நண்பர்கள்

ஆட்டோவில் வந்த நண்பர்களுக்குள் இடையே தகராறு ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் இருந்த இருவரை போக்குவரத்து காவலர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார்.

சென்னை சோழிங்கநல்லூர் காவல் நிலையம் அருகே உள்ள தனியார் கேஸ் நிரப்பும் நிலையத்திற்கு ஆட்டோவில் வந்த நண்பர்களுக்குள் இடையே தகராறு ஏற்பட்டதுள்ளது.

ஆட்டோவில் வந்த இருவரும் குடிபோதையில் இருந்ததாகவும், அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டதாகவும் தெரிகிறது. இந்நிலையில் ஆட்டோவிலிருந்து இறங்கிய அவர்கள், ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டனர். இந்த சண்டையில், ஒருவருக்கு மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. ரத்தம் சொட்ட சொட்ட நின்றவரை, போக்குவரத்து காவலர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார். போக்குவரத்து காவலரின் இந்த செயலை பலரும் பாராட்டினர்.

Exit mobile version