ஹாங்காங்கில் கைதிகள் பரிமாற்ற சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக எதிர்ப்பாளர் நடத்திய போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டதால் ஏராளமானோர் காயமடைந்தனர்.
குற்ற வழக்குகளில் சிக்குகிறவர்களை சீனாவுக்கு நாடு கடத்தி, வழக்கு விசாரணையை சந்திக்க வைக்க ஏதுவாக கைதிகள் பரிமாற்ற சட்டத்தில் திருத்தம் கொண்டுவர ஹாங்காங் நிர்வாகம் முடிவு செய்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஹாங்காங் எதிர்க்கட்சியினரும், பொதுமக்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் லட்சக்கணக்கான மக்கள் ஒன்று திரண்டு மாபெரும் பேரணி நடத்தினர். அப்போது, போலீசார் தடுத்து நிறுத்தியதால் இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதற்கிடையே, யுவான் லாங் மாவட்டத்தில் உள்ள சுரங்க ரெயில் நிலையத்தில் போராட்டக்காரர்களை குறிவைத்து மர்ம கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தியதில் ஏராளமானோர் காயமடைந்தனர். போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்துக்கு ஹாங்காங் நிர்வாக தலைவர் கேரி லேம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.