ஆள் பாதி ஆடை பாதி:
மனிதர்களுக்கு அடிப்படைத் தேவைகளான உணவு, உடை, இருப்பிடிடம், இவற்றை எல்லாம் அகற்றிவிட்டால் நமது வாழ்வியல் என்பதே இருக்காது. ஆள் பாதி ஆடை பாதி என்ற பழமொழியை கேட்
டிடாதவர்கள் எவரும் இருக்க முடியது. ஏனென்றால் நம்மை அழகாக பிரதிபலிப்பதில் முக்கிய பங்கு ஆடைக்கு உள்ளது என்றும் சொல்லலாம். மனிதனின் பரிணாம வளர்சியில் முக்கிய குறீயிடு என்பது இந்த ஆடைகள் தான். வரலாற்றின் படி சமூகத்தில் நிலவும் வர்க்கம், சாதி, மதம், நாகரீகம் உள்ளிட்ட பல்வேறு காரணிகளை உள்ளடக்கியதே ஆடை நாகரீகம் ஆகும்.
ஆடைகளின் வரலாறு:
முதன் முதலில் மனித இனம் தோன்றியது தென் ஆப்பரிக்காவில் தான். அப்போது அவர்களுக்கு ஆடைகள் பற்றிய யோசனை என்பது எழவில்லை. ஏன் என்றால் அதற்கு முக்கிய காரணம் அங்குள்ள தட்பவெப்ப நிலை. அதன் பின்பு அங்கிருந்து மக்கள் எல்லாரும் ஐரோப்பா, சைபீரியா போன்ற குளிர்பிரதேசங்களுக்கு இடம் பெயர்ந்தார்கள். அங்குள்ள கடுமையான பனியை மக்களால் தங்கிக்கொள்ள முடியவில்லை. அதனால் இயற்கையின் தாக்கதிலிருந்து மனித உடலை பாதுகாத்துக் கொள்ளவே ஆடைகள் தோன்றின. அப்போது மக்கள் விலங்குகளை வேட்டையாடி அதன் மாமிசத்தை உணவாக உட்கொண்டு வந்தனர்.
அதன் பின்னர் அந்த விலங்குகளின் தொலை பயன்படுத்தி கடும் குளிரில் இருந்து பாதுகாத்துக் கொள்ளவே பயன்படுத்தினர். இவாறாகவே உலகின் முதல் ஆடை என்பது உருவானது. பின்னர் காலங்கள் மாறின நாகரிகமும் மறியது. மேலும் இந்தியாவில் ஆடை என்பது எப்படி உடுத்த வேண்டும் யாரெல்லம் ஆடை உடுத்த வேண்டும் என்பதில் இருந்து வேற்றுமைகள் தோன்ற ஆரம்பித்தது. சட்ட மேதை அம்பேத்கர் அவர்கள் கோர்ட் அணிந்ததிற்கும் காந்தி சட்டைபோடததிற்கும் நிறைய அரசியல் உள்ளது என்று சொல்லலாம். இந்த வகையில் இந்த ஆடகளின் மீது எண்ணற்ற வரலாறுகள் உள்ளன. எது எப்படியானாலும் எந்த ஆடையாக இருந்தாலும் நம் பணம் கொடுத்துதான் வாங்குகிறோம். ஆனால் இங்கு ஒரு இடத்தில் இலவசமாக ஆடைகளை விற்பனை செய்கின்றனர்.
புதிய ஹெல்பிங் ஹார்ட்ஸ்:
கோவை நகரில் ஆடை தேவைப்படும் ஏழை மக்களுக்கு இலவசமாக ‘ஷாப்பிங்’ செய்யும் அனுபவத்தை, பயன்படுத்தப்பட்ட ஆடைகள் விநியோக நிலையம் மூலம் அளித்து வருகின்றனர் ‘ஹெல்பிங் ஹார்ட்ஸ்’ தன்னார்வ அமைப்பினர். இதற்காக நல்ல நிலையில் உள்ள துணிகளை தன்னார்வலர்கள் மூலம் அடுக்குமாடி குடியிருப்புகள், பள்ளி, கல்லூரிகள், தொழில் நிறுவனங்களில் இருந்து பெற்று வருகின்றனர். பெரும்பாலானோர் அவர்கள் வழங்கும் துணிகளை அவர்களே துவைத்தும், தேய்த்தும். மடித்தும். புது ஆடைகள் போல அவர்களிடம் தருகின்றனர்.
மேலும் அந்த ஆடகள் எல்லாம் நல்ல நிலையில் உள்ளதா என்று சரிப்பார்த்து அவற்றில் ஏதேனும் குறைபாடு இருந்தால் அதனை சரிசெய்கின்றனர். பின்னர் அந்த ஆடைகளை எல்லாம் நிறைய கிராமங்களை தேர்ந்தெடுத்து அவற்றில் உள்ள சமூகநல கூடங்களிலும். மண்டபவங்களிலும் விநியோக நிலையத்தை அமைக்கின்றனர். அதர்க்கு முன்பாக அந்த கிராமங்களில் உள்ள ஊராட்சி தலைவர்களிடம் தவல் அளித்து பின்னர் மக்களுக்கு தெரியப்படுத்துக்கின்றனர். கடந்த மே, ஜூன் மாதங்களில் 19 கிராமங்களில் இந்த விநியோக நிலையங்கள் அமைக்கப்பட்டன.
இதன் மூலம் 9,228 பேருக்கு மொத்தம் 18,955 ஆடைகள் விநியோகிக்கப்பட்டுள்ளன. அங்கு வரும் மக்கள் தங்களுக்கு தேவையான இரண்டு துணிகளை எடுத்து செல்லலாம் மற்றும் மாற்றியும் கொள்ளலாம் என்றனர். ஹெல்பிங் ஹார்ட்ஸ் அமைப்பிற்கு மாதம் தோரும் ஐயாயிரம் முதல் ஏழாயிரம் வரை துணிகள் கிடைக்கின்றது என கூறுகின்றனர். மேலும் பழைய துணிகளை தானமாக அளிக்க விரும்புவோர் 6374713775 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்”என்றனர்.
Discussion about this post