டெல்லியில் பேருந்து, மெட்ரோ ரயிலில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம்: கெஜ்ரிவால்

டெல்லியில் பேருந்து மற்றும் மெட்ரோ ரயில்களில் இனி பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் என்று அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், டெல்லி போக்குவரத்து கழகத்தின் கீழ் உள்ள அனைத்து பேருந்துகள் மற்றும் மெட்ரோ ரயில்களில் இனி பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் என தெரிவித்தார். இதன் மூலம் பெண்கள் பாதுகாப்பான பயணத்தை பெறலாம் என கூறிய அரவிந்த் கெஜ்ரிவால், பேருந்து மற்றும் மெட்ரோ ரயில்களில் பெண்கள் பயணிக்காமல் இருக்க இனி டிக்கெட் விலை காரணமாக இருக்காது என கூறினார்.

அதேசமயம் இந்த சலுகையை பெற விரும்பாத பெண்கள் டிக்கெட் எடுத்து பயணிக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

Exit mobile version