குடிசை மாற்று வாரியத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள ஒவ்வொரு வீடுகளுக்கும், பயணிகள் ஒன்றரை லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும் என திமுகவினர் வற்புறுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இலவச வீடு திட்டம் மூலம் கட்டப்பட்ட வீடுகளுக்கு பணம் கேட்டு திமுகவினர் அராஜகத்தில் ஈடுபடும் செயல் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.
சென்னை துறைமுகம் தொகுதிக்குட்பட்ட யானைக்கவுனி ஹவுசிங் போர்டு குடியிருப்புகள் பழுதடைந்து காணப்பட்டதால், கடந்த 2019ல் அதிமுக ஆட்சியின் போது, புதிதாக 288 வீடுகள் கட்டவதற்காக 46 கோடியே 14 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டு, அதற்கான பணிகள் நடைபெற்றது. மேலும் பயணாளிகள் எந்த வித பணமும் இந்த இலவச வீடுகளுக்கு கட்ட வேண்டாம் என கூறியதன் காரணமாக அப்பகுதிகள் வசித்து வந்த 260 குடும்பங்கள் அங்கிருந்து காலி செய்தனர்.
தற்போது விடியா ஆட்சியில் இந்த பணிகள் முடிந்த நிலையிலும், இதுவரை பயனாளிகளுக்கு வீடுகள் ஒதுக்கப்படவில்லை என பயனாளிகள் குற்றம் சாட்டுகின்றனர். இதனால், யானைக்கவுனி கல்யாணபுரம் பகுதியில் வசித்து வந்த மக்கள், தற்போது சவுகார்பேட்டை, வியாசர்பாடி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர்.
குறிப்பாக அப்போதைய எதிர்க்கட்சியாக இருந்த திமுக, குடிசை மாற்று வாரியத்தால் கட்டப்படும் வீடுகளுக்கு, ஏழை எளிய மக்களிடம் பணம் பெறக்கூடாது என கூறி வந்த நிலையில், தற்போது ஆட்சிக்கு வந்ததும் வீடு பெற விரும்பும் ஒவ்வொரு பயனாளியும் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் முன்பணம் செலுத்தினால் மட்டுமே வீடு ஒதுக்கப்படும் எனக்கூறி வருவது பொதுமக்களிடேயே அதிர்ப்த்தியை ஏற்படுத்திருக்கிறது.
இது நாள் வரை பயனாளிகளுக்கு வீடுகளை ஒதுக்காமல் காலம் தாழ்த்தி வருவதாகவும், இதனால் வாடகை கொடுக்க முடியாமல் தவித்து வருவதாகவும் பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இதேபோல் பல்வேறு இடங்களில் பழுதடைந்த குடிசை மாற்று வாரிய வீடுகள் இடிக்கப்பட்டு, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகள் என்ற பெயரில் கட்டப்படும் வீடுகளின் பணிகள் முடிவடைந்தும், ஏழை எளிய பயனாளிகளுக்கு வழங்காமல், பணம் கேட்டு திமுக நிர்வாகிகள் அராஜகத்தில் ஈடுபட்டுவருவதாகவும் பல குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.