நான்கு ஆண்டுகளாக வறட்சிக்கு பின்னர், ஈரோடு மாவட்டம் காலிங்கராயன் கால்வாய் பாசன பகுதியில் மகிழ்ச்சியுடன் நெல் அறுவடை பணிகளை விவசாயிகள் மகிழ்ச்சியுடன் தொடங்கி உள்ளனர். உரிய நேரத்தில் தண்ணீர் திறக்க உத்தரவிட்ட தமிழக அரசுக்கு அவர்கள் மனமார்ந்த நன்றியை தெரிவித்தனர்.
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து வரும் நீரை தடுக்கும் வகையில் காலிங்கராயன் அணை கட்டப்பட்டுள்ளது. இதிலிருந்து பாசனத்திற்கு கால்வாயில் தண்ணீர் திறக்கப்படுகிறது. பவானி,காலிங்கராயன் பாளையத்தில் தொடங்கி கொடுமுடி, அவுடையர்பாளையம் வரை 56 கிலோ மீட்டர் பாய்ந்து சென்று காவிரி ஆற்றில் கலக்கின்றது. இதன் மூலம்15 ஆயிரத்து 473 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இதனால் கரும்பு, நெல், மஞ்சள், வாழை, கிழங்கு , தென்னை ஆகியவற்றை விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர்.
காலிங்கராயன் கால்வாயில் கடந்த ஆகஸ்ட் 19-ம் தேதி பாசனத்துகாக தண்ணீர் திறக்கபட்டது. இதைதொடர்ந்து ஈரோடு கருங்கல்பாளையம், அக்ரஹாரம் முதல் கொடுமுடி வரை உள்ளிட்ட பகுதியில் நெல் நடவு பணிகள் மேற்கொள்ளபட்டது. தற்போது நெற் கதிர்கள் விளைந்துள்ள நிலையில், விவசாயிகள் அறுவடை செய்து வருகின்றனர். காலிங்கராயன் பாசன பகுதியில் அதிக அளவில் பிபிடி சன்ன ரகம், பொன்னி அரிசி ரகங்களை விவசாயிகள்
பயிரிட்டு உள்ளனர்.
நான்கு ஆண்டுகளாக நிலவிய கடும் வறட்சிக்கு பின்னர், இந்தாண்டு கால்வாயில் இரு போகத்திற்கும் தண்ணீர் திறக்கப்பட்டதால், எந்த வருடமும் இல்லாத அளவிற்கு, அதிக அளவில் விளைச்சல் ஏற்பட்டுள்ளதாக கூறும் விவசாயிகள், தமிழக அரசுக்கு காளிங்கராயன் பாசன பகுதி மக்கள் தங்களது நன்றியை தெரிவித்தனர்.
காளிங்கராயன் கால்வாய்க்கு தண்ணீர் திறக்கும் நாட்களை நீட்டிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விவசாயிகள் தமிழக அரசிடம் கோரிக்கையும் வைத்துள்ளனர்.