மக்களவை தேர்தல் பணிகள் தொடர்பாக தமிழகம் உட்பட 4 மாநில டிஜிபிக்கள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம் இன்று ஊட்டியில் நடைபெற உள்ளது.
வரும் ஏப்ரல், மே மாதங்களில் நாடு முழுவதும் மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், தேர்தல் பணிகள் தொடர்பாக தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் காவல் துறை இயக்குநர்களின் ஆலோசனை கூட்டம் இன்று ஊட்டியில் நடைபெற உள்ளது.
சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் தேர்தலை சுமூகமாக நடத்துவதற்கான வழிவகைகள் குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்க உள்ளனர். முந்தைய தேர்தலின் போது மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு முறை, அதி நவீன உபகரணங்கள் பயன்பாடு, புதிய முறைகளில் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் காவல்துறை இயக்குநர்களுடன் தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஆலோசிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.