கீழடியில் ஐந்தாம் கட்ட அகழ்வாராய்ச்சி பணியில் சதுர வடிவிலான செங்கல்லால் அமைக்கப்பட்ட தொட்டி போன்ற அமைப்பு கண்டறியப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் கீழடியில் ஐந்தாம் கட்ட அகழ்வாராய்ச்சி பணி தற்போது, மும்மரமாக நடைபெற்று வருகிறது. முதல் நான்கு கட்டங்களை விட, ஐந்தாம் கட்ட அகழ்வாராய்ச்சி பணியில் அதிகமாக பொருட்கள் கிடைக்க பெற்று வருகின்றன. தற்போது, சதுர வடிவிலான செங்கல்லால் அமைக்கப்பட்ட தொட்டி போன்ற அமைப்பு கண்டறியப்பட்டுள்ளது. ஏற்கனவே இரண்டு பக்க மதில் சுவர் போன்ற ஒரு அமைப்பும், உறை கிணறு ஒன்றும் கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post