திருவள்ளூர் சட்டமன்றத்திற்கு உட்பட்ட திருவாலாங்காடு பகுதியில் பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் 106வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் விமரிசையாக நடைபெற்றது. மேலும் இப்பொதுக்கூட்டத்தில் நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இந்தப் பொதுக்கூட்டத்தில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா அவர்கள் பங்கேற்றார்.
பொதுக்கூட்டதில் பேசிய முன்னாள் அமைச்சர் பி.வி. ரமணா அவர்கள், அதிமுக ஆட்சியில் முதியவர்களுக்காக வழங்கப்பட்ட ஓய்வூதிய திட்டமானது 35 இலட்சம் பேருக்குக்கு தமிழகம் முழுவதும் அளிக்கப்பட்டது, அது தற்போது இந்த விடியா ஆட்சியில் 15 இலட்சம் நபராக குறைக்கப்பட்டுள்ளது என்று குற்றம் சாட்டினார். தற்போதைய எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் தமிழக முதல்வராக இருந்தபோது முதன்முதலில் முதியவர்களுக்கான ஓய்வூதியம் 35 இலட்சம் என்று அறிவித்திருந்த நிலையில் அதனை நீக்கி 15 இலட்சமாக குறைத்தது மிகவும் கண்டனத்திற்குரியது என்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் 35 ஆயிரம் முதியவர்களுக்கு மாதமாதம் ஆயிரம் ரூபாய் அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்டிருந்தது அதனை 20 ஆயிரம் பேருக்கு மட்டுமே இந்த விடியாத திமுக அரசு செய்வது மோசமான செயல் என்றும் முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா அவர்கள் தெரிவித்தார்.
Discussion about this post