திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் கொரோனா தடுப்பூசி முகாம் குறித்து போதிய விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான சேவூர் ராமச்சந்திரன் அதிகாரிகளை கேட்டுக் கொண்டார்.
ஆரணி அருகே சேவூர் ஊராட்சியில் உள்ள அரசினர் மேல்நிலைப் பள்ளியில் சுகாதாரத் துறை சார்பாக கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெற்றது. வட்டாட்சியர் செந்தில் குமார் தலைமையில் தொடங்கிய முகாமில் ஊராட்சி மன்ற பிரதிநிதிகள், வருவாய்த் துறை அதிகாரிகள் மற்றும் மருத்துவர்கள் என பலர் கலந்து கொண்டனர். முகாமில் கொரோனா தடுப்பூசி குறித்து போதிய விழிப்புணர்வை அதிகாரிகள் ஏற்படுத்தவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டினர். இந்த நிலையில், முகாமில் ஆய்வு மேற்கொண்ட முன்னாள் அமைச்சரும் ஆரணி சட்டமன்ற உறுப்பினருமான சேவூர் ராமச்சந்திரன், தடுப்பூசி முகாம் குறித்து போதிய விழிப்புணர்வை, பொதுமக்களிடம் ஏற்படுத்துமாறு கேட்டுக்கொண்டார். மேலும், தடுப்பூசியின் அவசியம் குறித்து பொதுமக்களிடம் எடுத்துரைத்தார்.
Discussion about this post