காங்கிரஸ் முன்னாள் தலைவர் இளைய பெருமாளுக்கு மணிமண்டபம் அமைக்கபடுவதற்கு அதிமுக வரவேற்பு.
மறைந்த இளைய பெருமாளுக்கு மணிமண்டபம் அமைப்பதற்கு அதிமுக சார்பில் வரவேற்பு அளிப்பதாக அவிநாசி சட்டமன்ற உறுப்பினர் தனபால் சட்டப்பேரவையில் பேசினார். முன்னாள் காங்கிரஸ் தலைவர் இளைய பெருமாளுக்கு மணிமண்டபம் அமைப்பது குறித்து தமிழக அரசு 110 விதியின் கீழ் இன்று அறிவிப்பு வெளியிட்டது. இதற்கு சட்டப்பேரவையில் பேசிய முன்னாள் சட்டப்பேரவை தலைவரும் அவிநாசி அதிமுக சட்டமன்ற உறுப்பினருமான தனபால் காங்கிரஸ் பேரியக்கத்திற்காக பாடுபட்ட தலைவர்களில் ஒருவரான இளையபெருமாளுக்கு மணி மண்டபம் அமைப்பதற்கு அதிமுக சார்பில் வரவேற்பு அளிப்பதாக தெரிவித்தார்.