கலிஃபோர்னியாவில் காட்டுத்தீ – 154 ஏக்கர் நிலங்கள் சேதம்

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகணத்தில் ஷாஸ்டா (Shasta) வனப்பகுதியில் நேற்று திடீரென காட்டுத் தீ பரவியது. இதனால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. காட்டுத்தீயால் அப்பகுதியில் உள்ள சுமார் 884 வீடுகள் பாதிப்படைந்துள்ளன. அப்பகுதியில் வசிக்கும் மக்கள், தங்களது உடைமைகளை எடுத்துக்கொண்டு, வெளியேறும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. காட்டுத் தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Exit mobile version