தமிழ்நாடு வனத்துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் தொகையாக 20 சதவீதம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும், வனத்தோட்டக் கழகம், அரசு ரப்பர் கழகம், தேயிலை தோட்டக் கழகம் ஆகிய நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு தீபாவளி பண்டிகையை கொண்டாட ஏதுவாக 2017 – 2018ம் ஆண்டிற்கான போனஸ் மற்றும் கருணைத் தொகையை தமிழக அரசு அறிவித்துள்ளது. 8.33 சதவீதம் போனஸ் மற்றும் 11.67 கருணைத் தொகை என 20 சதவீதம் போனஸ் தொகை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
Discussion about this post