தமிழ்நாட்டில் தக்காளி விலைதான் அதிகம்-னு பார்த்தால், ஒவ்வொரு அத்தியாவசியப் பொருட்களுடைய விலையையும் அதிகப்படுத்தி வருகிறார்கள். தற்போது நமது மதுப்பிரியர்களின் அத்தியாவசியத் தேவையான மதுபான பாட்டில்கள் விலையையும் உயர்த்தி இருக்கிறது அரசு. ஒருவேளை பத்து ரூபாய் வசூலிப்பதை கண்டுபிடித்து விட்டதால் நூதனமாக இதனை வேறு வழியில் செயல்படுத்தலாம் என்று எண்ணி வெளிநாட்டு மதுபான பாட்டில்களின் விலையை உயர்த்தி இருக்கிறதோ என்று சில அரசியல் விமர்சகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
வெளிநாட்டு மதுபானம் விலை ஏற்றம்!
தற்போது தமிழகத்தில் வெளிநாட்டு மதுபான பாட்டில்கள் விலை இன்றிலிருந்து உயர்த்தப்பட உள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. கிட்டத்தட்ட 10 ரூபாய், 20 ரூபாய், 60 ரூபாய், 120 ரூபாய், 240 ரூபாய், 320 ரூபாய் என பல்வேறு நிலைகளில் விலை உயர்த்தப்பட்டுள்ளது. 330ml -280ரூபாயில் இருந்து 290 ரூபாய்க்கு விற்பனை ஆக உள்ளது. 750ml அளவு உள்ள மதுபானம் 2000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால் தற்போது 2240 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட இருக்கிறது. 750ml வெளிநாட்டு மதுபான வோட்கா 2010 ரூபாய்க்கு விற்பனை செய்தது. ஆனால் தற்போது 2250 ரூபாய்க்கு விற்பனை ஆக உள்ளது. சூப் வோட்கா 700ml 1690 ரூபாய்க்கு விற்பனையாகி வந்தது. ஆனால் தற்போது 1930 ரூபாய்க்கு விற்பனை ஆக உள்ளது. இதுபோல வெளிநாட்டு மதுபானங்கள் ஒவ்வொன்று விலையேற்றப்பட்டு இருக்கின்றன. இப்படி ஒரு பக்கம் இருக்க தமிழக அரசிற்கு உயர்நீதிமன்றமானது ஒரு கேள்வி ஒன்றினை எழுப்பியுள்ளது.
டாஸ்மாக் நிறுவனத்திற்கு நீதிமன்றத்தின் கேள்வி..!
அதன்படி, டாஸ்மாக் நிறுவனத்தின் மதுபானங்கள் எந்தெந்த நிறுவனங்களிடமிருந்து, எவ்வளவு விலைக்கு வாங்கப்படுகின்றன என்ற விவரங்களை வழங்குவதில் எப்படி விலக்கு கோர முடியுமென தமிழக அரசுக்கு கேள்வி ஒன்றினை எழுப்பியுள்ளது சென்னை உயர்நீதிமன்றம். வழக்கறிஞர் லோகநாதன் என்பவர் தொடர்ந்த வழக்கில், இந்த விவரங்களை தகவல் உரிமைச் சட்டப்பிரிவின்படி வழங்க வேண்டுமென தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து டாஸ்மாக் நிறுவனம் மேல்முறையீடு வழக்கில் தலைமை நீதிபதி அமர்வு கேள்வியெழுப்பியுள்ளது.
அதாவது டாஸ்மாக்கின் வாதமானது, மூன்றாவது தரப்பின் வர்த்தகம் பாதிக்கப்படும் என்பதால் ஆர்.டி.ஐ-யில் தகவல்களை வழங்க முடியாது என்று கருத்து தெரிவித்துள்ளது. இதற்கு நீதிமன்றமானது, எதன் அடிப்படையில் விலக்கு பெற்றது என்பதை இரண்டு வாரங்களில் தெரிவிக்க டாஸ்மாக் நிறுவனத்திற்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. தலைமை நீதிபதி சஞ்சய் கங்கபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு தலைமையிலான நீதிமன்ற அமர்வானது, தமிழகத்தில் டாஸ்மாக் நிறுவனம் மட்டுமே மதுபான விற்பனையில் ஈடுபடுகிறது என்றும் மதுபானம் கொள்முதலுக்கு எந்த டெண்டரும் கோரப்படுவதில்லை என்றும் உற்பத்தி நிறுவனங்களில் இருந்து நேரடியாக கொள்முதல் செய்யப்படுகின்றன என்றும் இந்த சூழலில் எப்படி வர்த்தகம் பாதிக்கப்படுகிறது என்றும் கேள்வி எழுப்பி உள்ளனர்.