நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமை திட்டத்தின் கீழ், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வேளாண்மை துறை வளாகத்தில் விவசாயிகளுக்கு 50 சதவீதம் மானியத்தில் மின்மோட்டார் வழங்க ஆணை வழங்கப்பட்டது.
வேளாண்மைத் துறை மற்றும் தோட்டக்கலை துறையின் மூலமாக நுண்ணீர் பாசன திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அக்டோபர் 2018 க்கு பிறகு நுண்ணீர் பாசனம் திட்டத்தில் பயன் பெற்ற விவசாயிகள் நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமை அலுவலகத்தை அணுகி மின் மோட்டார்கள் , நீர்ப்பாசன குழாய்கள் மற்றும் நீர் தேக்க தொட்டிகளை 50 சதவீத மானியத்தில் பெற்று பயனடையலாம். அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வேளாண்மை துறை வளாகத்தில் 4 விவசாயிகளுக்கு 50 சதவீதம் மானியத்தில் மின்மோட்டார் வழங்க ஆணை வழங்கப்பட்டது. இதுவரை காஞ்சிபுரம் மாவட்டத்தில் இந்தத் திட்டத்தின் மூலம் 49 விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post