தமிழகம் மற்றும் புதுவையில் வெப்பச்சலனம் காரணமாக இன்று மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வெப்பசலனம் காரணமாக இன்று லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடலூர், விழுப்புரம், காஞ்சிபுரம் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் மிதமான மழையும், ஓரிரு இடங்களில் கன மழைக்கும் வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடனும், நகரின் ஒரு சில இடங்களில் லேசான முதல் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Discussion about this post