வட மாநிலங்களில் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கால், ஏராளமானோர் வீடுகளை இழந்துள்ளனர்.
அசாம், ஹரியானா, உத்தரப்பிரதேசம், பீகார் மற்றும் ஜார்க்கண்ட் போன்ற வடமாநிலங்களில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பலர் வீடுகளை இழந்து, பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, பிரம்மபுத்திரா ஆற்றில் ஏற்பட்டுள்ள கடும் வெள்ளப்பெருக்கால் அசாமில், 43 லட்சம் பேர் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர். வெள்ளத்தில் சிக்கி இதுவரை 15-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அங்குள்ள 33 மாவட்டங்களில் 25 மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. பல வீடுகளில் வெள்ளநீர் புகுந்துள்ளதால் பொதுமக்கள் உணவு சமைக்கமுடியாமலும், இயற்கை உபாதைகளை கழிப்பதற்கும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். திரிபுரா, பீகார் மாநிலங்களிலும் தொடர் மழையால் ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
Discussion about this post