வெள்ள தடுப்பு என்ற பெயரில் தொடர்ந்து மக்களின் வரிப்பணமானது வீணடிக்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டு தற்போது எழுந்துள்ளது. ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி திருப்புகழ் கொடுத்த அறிக்கையின் அடிப்படையில் சென்னை முழுவதும் சுமார் 4000 கோடி ரூபாய்க்கு மக்களுக்கு பயன்படாத மழைநீர் வடிகால் கால்வாய்கள் உள்ளது என்று கூறியுள்ளார். பல பகுதிகளின் தரமற்ற முறையில் போட்டுள்ளதால் வாகனம் ஏறி இறங்கினாலே உடைந்து பயனில்லாமல் போகும் நிலையில் வடிகால் கால்வாய்கள் உள்ளன என்றும் தெரிவித்தார். வெள்ள தடுப்பு நடவடிக்கை என்ற பெயரில் ஜப்பான் நாட்டிற்கு இன்பச் சுற்றுலா செல்கிறார்கள் தமிழக அரசு அதிகாரிகள்.
சென்னையில் ஒரு சொட்டு மழை நீரை கூட தங்க விடமாட்டோம் எனத் தேர்தலில் வாக்குறுதி கொடுத்து பொய் பிரச்சாரம் செய்த திமுக அரசு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை நீர் வடிகால் கால்வாய் அமைக்கிறோம் என்ற பெயரில் சுமார் 4500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மக்கள் வரிப்பணத்தை வீணடித்து 50 சதவீத பணிகளை மட்டும் செய்து முழுமையாக மழை நீர் வடிகால் பணிகள் அமைத்து விட்டோம் என கொக்கரித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் உண்மையில் அந்த 50 சதவீத பணிகள் கூட முழுமையாக முடியாமல் பல இடங்களில் தரமற்ற முறையில் மழை நீர் வடிகால் கால்வாய்கள் அமைக்கப்பட்டும் மக்களுக்கு பயன்படாமல் வீணாகிக் கொண்டிருக்கிறது என்பது உண்மை. இதுபோல சென்னை முழுவதும் பல இடங்களில் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறது. கடந்த பருவமழை குறைவாக பெய்தும் கூட பல இடங்கள் வெள்ளை காடாய் காட்சியளித்தது. ஆனால் ஆனால் விடிய அதிமுக அரசு வெள்ளத்தை வென்று விட்டோம். ஒரு துளி கூட மழை நீர் சென்னையில் தேங்கவில்லெ என கொக்கரித்துக் கொண்டனர்.
இன்றும் பல பகுதிகளில் மழை நீர் வடிகால் கால்வாய்கள் அமைக்கும் பணி துவங்கவில்லை குறிப்பாக சென்னை புறநகர் பகுதிகளில் மழை வெள்ளம் ஏற்கனவே இருந்ததைப் போன்றே தேங்கி வருகிறது என்பதுதான் நிதர்சனமான உண்மை.
மக்கள் வரிப்பணம் முழுமையாக வீணடிக்கப்பட்டுள்ளது அமைக்கப்பட்டுள்ள மழை நீர் வடிகால் கால்வாய்களில் முறையாக தூர்வாரப்படாமல் குப்பை மூலமாக காட்சியளிக்கிறது. இது ஒரு புறம் இருக்க கொசஸ்தலை ஆறு அடையாறு கூவம்ஆறு புழல் ஏரி வாய்க்கால் பகுதிகள் என பல பகுதிகளில் மழை வெள்ளம் கடந்த காலங்களில் சரியாக சென்றது ஆனால் தற்போது அந்த நீர் வழித்தடங்களை தனியார் நிறுவனம் மூலம் 5 கோடி ரூபாய் திட்ட அறிக்கை தயாரிக்க விடியா திமுக அரசு ஒதுக்கி உள்ளது. அதன் பேரில் தமிழக நீர்வளத்துறை அதிகாரிகள் வீட்டு வசதி துறை அதிகாரிகள் உள்ளிட்ட எட்டு பேர் கொண்ட குழு ஜப்பான் பன்னாட்டு முகமையின் ஏற்பாட்டில் ஜப்பான் நாட்டிற்குச் சென்று வெள்ள தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்வதற்காக செல்கின்றனர். ஒட்டுமொத்தத்தில் ஏற்கனவே முதலமைச்சர் முதல் திமுக அமைச்சர்கள் வரை குடும்பத்துடன் இன்ப சுற்றுலா சென்று சென்று வந்தது தான் விடியா திமுக அரசின் சாதனையாக இருக்கிறது. தற்போது நீர் வழித்தடங்களை சீர்படுத்துகிறோம் என்ற பெயரில் ஜப்பான் நாட்டிற்கு அதிகாரிகள் கொண்ட குழு இன்பச் சுற்றுலா செல்லவிருக்கிறது. இந்த விடியா அரசு மக்கள் வரிப்பணத்தில் அவர்களுக்கான நலத்திட்டங்களை செயல்படுத்தாமல் இவர்கள் சுயநலத்திற்காகவும் இன்ப சுற்றுலா செல்வதற்காகவும் மட்டுமே வீணடிக்கப்படுகிறது என்பது அனைவரின் குற்றச்சாட்டாக உள்ளது.