அசாமில் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக, ஊருக்குள் புகுந்த புலி ஒன்று, ஒரு வீட்டின் கட்டிலில் படுத்துக் கொண்டிருக்கும் காட்சி, சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவிவருகிறது.
அசாமில் தற்போது பெரும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளத்தில் சிக்கி, மனிதர்கள் மட்டுமல்லாமல், காட்டு விலங்குகளும் அவதிப்பட்டு வருகின்றன. இந்நிலையில், வங்க இனத்தை சேர்ந்த புலி ஒன்று, வெள்ளம் காரணமாக காட்டை விட்டு வெளியேறி, தேசிய நெடுஞ்சாலையை தாண்டி, ஊருக்குள் புகுந்து, ஒரு வீட்டின் கட்டிலில் படுத்து கொண்டது. அதனை பார்த்தவர்கள், புகைப்படம் எடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளனர். வெள்ளத்தால் ஏற்கனவே அந்த வீட்டில் இருந்தவர்கள் வெளியேற்றப்பட்டதால், பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை. தற்போது, புலியை மீண்டும் காட்டுக்குள் அனுப்பும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே, புலி கட்டிலில் படுத்திருக்கும் காட்சி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவிவருகிறது.
Discussion about this post