வைகை அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருவதால் கரையோர மக்களுக்கு 3-ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டத்தில் கம்பம், பெரியகுளம், ஆண்டிப்பட்டி, போடி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடின. இந்தநிலையில் வைகை அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.
அணையின் நீர்மட்டம் 69 அடியை எட்டியதால் கரையோர மக்களுக்கு 3-ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதேபோல் மாவட்ட நிர்வாகம் தரப்பில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.
Discussion about this post