கோவை மாவட்டம் சூலூர் அருகே காரும், லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காரில் பயணம் செய்த 5 பேர் உயிரிழந்தனர்.
கேரளா மாநிலம் எர்ணாகுளம் பட்டாம்பி பகுதியை சேர்ந்தவர் அப்துல் மஜீத். கட்டிட காண்டிராக்டரான இவர் தன்னுடைய நிறுவனத்தில் வேலை செய்யும் வடமாநிலத்தைச் சேர்ந்த ஒரு பெண் உட்பட நான்கு பேருடன் காரில் கன்னியாக்குமரிக்கு சுற்றுலா சென்று கொண்டிருந்தார். அப்போது சூலூர் அருகே எதிர்பாராத விதமாக பழைய பேப்பர்களை ஏற்றிக்கொண்டு வந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரில் பயணம் செய்த 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் மேலும் 3 பேரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, கிசிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதிகாலையில் நடந்த விபத்தால், அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Discussion about this post