மீன்பிடி தடைக்காலம் 61 நாட்களாக நீட்டிக்கப்பட்டுள்ளதால் அரசு தரும் உதவி தொகையை உயர்த்த வேண்டுமென குமரி மேற்கு மாவட்ட மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
கன்னியாகுமரி மேற்கு கடற்கரை பகுதிகளான மணக்குடி, ராஜாக்கமங்கலம், முட்டம், குளச்சல், இனையம், தூத்தூர், நீரோடி உள்பட 40 கடலோர கிராமங்களில் மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மீன் இனப்பெருக்க காலத்தினை கருத்தில் கொண்டு, மீன்வளத்தை பாதுகாக்கும் வகையில் ஜூன் 1 முதல் துவங்கி 61 நாட்கள் மீன்பிடிப்பது நிறுத்தப்பட்டுள்ளது.குமரி மேற்கு கடல் பகுதியில் மீனவர்கள் விசை படகுகள் மற்றும் இழு வலை படகுகளை கொண்டு மீன்பிடி தடைக்காலத்தில் மீன்பிடிக்க வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.
தடையை மீறி மீன்பிடி தொழிலில் ஈடுபடும் விசைபடகு உரிமையாளர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளபடும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இந்தநிலையில் மீன்பிடி தடையை மீறி தனியார் நிறுவனங்கள் மீன்கள் பிடிப்பதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். மீன்பிடி தடைக்காலத்தை நீட்டிப்பு செய்துள்ளதால், உதவி தொகையையும் உயர்த்தி வழங்க வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளனர்.
Discussion about this post