கடல் சீற்றம் தணிந்ததையடுத்து கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றபோது வலையில் ஏராளமான மீன்கள் சிக்கியதால் மீனவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
நாகை மாவட்டத்தில் ஃபானிப் புயல் காரணமாக கடந்த 9 நாட்களுக்கும் மேலாக நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதன் காரணமாக மீனவர்கள் வருமானம் இழந்து தவித்து வந்தனர். இந்நிலையில் ஃபானிப் புயல் கரையை கடந்ததையடுத்து, நாகையில் கடல் சீற்றம் சற்று தணிந்தது.
இதையடுத்து இன்று நாகை, அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம், செருதூர், தரங்கம்பாடி, நம்பியார்நகரை சேர்ந்த பெரும்பாலான நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். அப்போது மீனவர்களின் வலையில் ஏராளமான மத்தி மீன்கள் சிக்கியதால் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.