கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் கேரை மீன் சீசன் துவங்கியுள்ள நிலையில், வரத்து குறைந்துள்ளதால் விலை உயர்ந்துள்ளது.
கடந்த சில வாரங்களாக கடலில் ஏற்பட்ட பருவநிலை மாற்றத்தால் நூற்றுக்கு மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடி தொழிலுக்கு செல்லாமல் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக மீன்களின் வரத்து வெகுவாக குறைந்ததோடு, விலை 80 ரூபாயில் இருந்து 150 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. இந்த நிலையில் கேரளாவை சேர்ந்த ஏற்றுமதி நிறுவனங்கள் கேரை மீன்களை கொள்முதல் செய்வதில் ஆர்வம் காட்டுவதால், உள்ளூர் சில்லறை வியாபாரிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.
Discussion about this post