காற்றின் வேகம் குறைந்ததால் பாம்பன் பகுதி மீனவர்கள் கடலுக்கு சென்ற நிலையில் ஏராளமான மீன்களுடன் கரை திரும்பினர்.
இராமநாதபுரம் மாவட்டத்தில் ஏற்பட்ட சூறைக்காற்று காரணமாக மாவட்டத்தில் உள்ள விசைபடகுகள் கடலுக்கு சென்று மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால் ஆயிரத்தி 800க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரையோரங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் காற்றின் வேகம் குறைந்ததால் விசைபடகுகளுக்கு மீன்பிடிக்க அரசு அனுமதி வழங்கியது. இதனால் பாம்பன் பகுதியில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குள் சென்றனர். மீனவர்களின் வலையில் வஜ்ரம், திருக்கை, குமுலா, பாரை மீன்கள் மற்றும் ரிப்பன் மீன் என ஏராளமான மீன்கள் சிக்கியதால் மகிழ்ச்சியுடன் கரை திரும்பினர்.