இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு நான்கு மாதங்களுக்கு பிறகு விடுதலையாகி தாயகம் திரும்பிய 2 மாணவர்கள் உள்பட 8 மீனவர்கள் மத்திய, மாநில அரசுகளுக்கு நன்றி தெரிவித்தனர்.
ராமேஸ்வரத்திலிருந்து கடந்த ஜனவரி 13ம் தேதி மீன்பிடிக்க சென்ற மீனவர்களை இலங்கை கடற்படையினர் விரட்டி அடித்தனர்.
அப்போது, மீனவர்களின் படகு ஒன்றின் மீது அவர்களின் கப்பல் மோதியதில், முனியசாமி என்ற மீனவர் கடலில் மூழ்கி இறந்தார். இதையடுத்து கஞ்சா கடத்தி வந்ததாக பொய்வழக்கு பதிவு செய்து, 8 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.
மத்திய, மாநில அரசுகள் இலங்கை அரசுக்கு கொடுத்த அழுத்தத்தின் காரணமாக மீனவர்கள் விடுவிக்கப்பட்டனர். தங்களை விடுவிக்க உடனடி நடவடிக்கை எடுத்த மத்திய, மாநில அரசுகளுக்கு மீனவர்கள் நன்றி தெரிவித்தனர்.