மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்: வானிலை ஆய்வு மைய இயக்குனர்

குமரிக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக உருவெடுத்துள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று பின் புயலாக மாற வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக, 20 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Exit mobile version