கடல்காற்று காரணமாக மீனவர்கள் கடலுக்குள் செல்ல தடை

கடல் காற்று அதிகம் வீசுவதால், நாகை மாவட்டம் வேதாரண்யம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள், கடலுக்கு மீன்பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனால் 6-வது நாளாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் படகுகள் கரையில் நிறுத்தப்பட்டுள்ளன. மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லாததால் கடற்கரை வெறிச்சோடி காணப்படுகிறது. இதனால் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், மீன்வளத் துறையிடமிருந்து மறு உத்தரவு வரும் வரை மீன்பிடிக்க கடலுக்குள் செல்வதில்லை என மீனவர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version