மீன்களுக்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கை எடுப்படும் என ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வீரராகராவ் உறுதியளித்தன் பேரில் மீனவர்கள் போராட்டத்தை கைவிடுத்து கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.
ஏற்றுமதியாகும் இறால், நண்டு, கணவாய் உள்ளிட்ட மீன் வகைகளுக்கு உரிய விலை கிடைக்கவும், தடையின்றி ஐஸ்கட்டிகள் நியாயமான விலைக்கு வழங்க வலியுறுத்தியும் கடந்த 17ந்தேதி முதல் ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்தநிலையில், இது தொடர்பாக ஏற்றுமதி நிறுவனங்களை அழைத்துப் பேசி உரிய விலை கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியர் வீரராக ராவ் மீனவ சங்க பிரதிநிதிகளிடம் தெரிவித்தார். இதனையடுத்து ராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை கைவிட்டு வழக்கம் போல இன்று காலை மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.
Discussion about this post