தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாமல், 5 ஆயிரம் ரூபாய் மட்டும் மீன்பிடி தடைக்கால நிவாரணமாக வழங்கி, மீனவ மக்களின் வயிற்றில் திமுக அரசு அடித்துள்ளதாக மீனவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
மீன்பிடி தடைக்கால நிவாரணமாக 8 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என திமுக தமது தேர்தல் அறிக்கையில் தெரிவித்தது. இந்த நிலையில் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாமல், 5 ஆயிரம் ரூபாயை மட்டுமே திமுக அரசு அளித்திருப்பதாக மீனவ சங்கங்கள் குற்றம்சாட்டியுள்ளன. ஆட்சிக்கு வந்ததும் திமுக தமது வழக்கமான பாணிகளை கையாண்டு, மீனவர்களை தொடர்ந்து வஞ்சித்து வருவதாகவும், தங்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு நிவாரணத் தொகையை உயர்த்தி தர வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளனர். .
Discussion about this post