வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு குடிநீர் கொண்டு வருவதற்கான முதற்கட்ட சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது.
சென்னையின் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க ஜோலார்பேட்டையிலிருந்து ரயில் மூலம் குடிநீர் கொண்டு வருவதற்கு தமிழக அரசு முடிவு செய்தது. இந்நிலையில் இதற்கான பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் சோதனை ஓட்டம் இன்று நடைபெற்றது.ஜோலார்பேட்டை அருகில் மேட்டுக்குப்பம் காவிரி கூட்டுகுடிநீர் நீர்தேக்க தொட்டியில் நீர் நிரப்பட்டு அங்கிருந்து குழாய் மூலம் ரயில்வே நிலையப் பகுதிக்கு நீர் கொண்டுவரப்பட்டது. இந்தத் திட்டத்தின் மூலம் சென்னைக்கு ஒருநாளைக்கு அதிகபட்சமாக 7.5மில்லியன் லிட்டர் தண்ணீர் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.