இந்தியாவிலேயே Synthetic napkin pad பயன்படுத்தாத முதல் கிராமம் இதுதான்..

கேரளாவில் உள்ள ஆலப்புலா மாவட்டத்தில் இருக்கும் முகம்மா என்ற கிராமத்தில் நாட்டிலேயே முதன்முறையாக synthetic pad-களை பயன்படுத்துவதை தவிர்த்து உள்ளனர்.

நாம் அன்றாட பயன்படுத்தும் பிளாஸ்டிக் பாட்டில்கள், பைகள் இவற்றினால் சுற்றுச்சூழலுக்கு அதிகளவில் பாதிப்பு ஏற்படுகிறது. அதிலும் முக்கியமாக மாதவிடாய் காலங்களில் பெண்கள் பயன்படுத்தும் சானிட்டரி நாப்கின்கள் ஒரு மாதத்திற்கு மட்டும் ஒரு லட்சம்  வெளியேற்றப்படுகிறது.

ஒரு  சானிட்டரி நாப்கின் ஆனது 4 பிளாஸ்டிக் பைகளுக்கு சமமாம். அதனால் பிளாஸ்டிக்கை தடை செய்வது எந்த அளவுக்கு முக்கியமான ஒன்றோ,அதேபோல் பிளாஸ்டிக்கால் ஆன நாப்கின்களை பயன்படுத்துவதையும் தவிர்க்க வேண்டும்.

சுற்றுச்சூழலின் அவசியத்தைப் புரிந்து கொண்ட முகம்மா கிராமம் மறுசுழற்சி செய்யப்படும் pad, menstrual cup, மென்மையான துணி  போன்றவற்றை பயன்படுத்த பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.மேலும், இந்தியாவிலேயே Synthetic pad பயன்படுத்தாத கிரமமாக கேரளாவை சேர்ந்த முகம்மா கிராமம் திகழ்ந்து வருகிறது.

Exit mobile version