மேற்கு வங்க மாநிலம் துர்காபூரில் இருந்து 80 மெட்ரிக் டன் ஆக்சிஜன் கொண்ட விரைவு ரயில் சென்னை வந்தடைந்தது.
கொரோனா இரண்டாம் அலையின் தாக்கத்தால் ஆக்சிஜன் பற்றாக்குறையை போக்க அண்டை மாநிலங்களில் உதவி கோரப்பட்டுள்ளது. இதற்காக மேற்கு வங்க மாநில துர்காபூரில் உள்ள உருக்காலையில் உற்பத்தி செய்யப்பட்ட 80 மெட்ரிக் டன் ஆக்சிஜன் தமிழகத்துக்கு விரைவு ரயில் மூலமாக அனுப்பப்பட்டது. இந்த விரைவு ரயில் சென்னை தண்டையர்பேட்டை சரக்கு பெட்டக முனையத்துக்கு வந்தடைந்தது. வெளி மாநிலத்தில் இருந்து ரயிலில் ஆக்சிஜன் கொண்டு வந்தது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.