ஓஎன்ஜிசி எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை வளாகத்தில் தீவிபத்து

மும்பை அருகே ஊரன் என்னுமிடத்தில் ஓஎன்ஜிசி ஆலையில் ஏற்பட்ட பெரும் தீவிபத்தில், 4 பேர் உயிரிழந்ததாகவும், 3பேர் தீக்காயமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மும்பை அருகே உள்ள ஊரன் என்னுமிடத்தில் ஓஎன்ஜிசி நிறுவனத்துக்குச் சொந்தமான எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையும் எரிவாயு சேமிப்புக் கிடங்கும் உள்ளது. இதன் வெள்ள நீர் வடிகால் பகுதியில் இன்று காலை திடீரெனத் தீப்பிடித்தது. தகவல் அறிந்ததும் ஓஎன்ஜிசி தீயணைப்புப் படையினர், நெருக்கடி நிலை மேலாண்மைக் குழு இணைந்து தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். மேலும் நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து தீயணைப்பு வாகனங்களுடன் விரைந்து வந்த வீரர்களும் தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். தீ முற்றிலும் கட்டுப்படுத்தப்பட்டதாகவும், எண்ணெய் சுத்திகரிக்கும் பணி பாதிக்கப்படவில்லை என்றும் ஓஎன்ஜிசி தெரிவித்துள்ளது. இந்த விபத்தில் 4பேர் உயிரிழந்ததாகவும், 3பேர் தீக்காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Exit mobile version