சென்னையில் தீ விபத்து.. பிரபல நட்சத்திர விடுதியில் பரபரப்பு!

சென்னை திருவெல்லிக்கேணி வாலாஜா சாலையில் உள்ள ஸ்டாலின் ப்ளசன்ட் பார்க் எனும் நட்சத்திர விடுதி ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டது. இது ஸ்டாலின் ஜோசப் என்பவருக்கு சொந்தமான இடமாகும். இந்த விடுதியில் 207ஆம் எண் கொண்ட அறையில் திடீரென்று தீவிபத்து ஏற்பட்டது. தீ மளமளவென பரவி அந்த அறையிலுள்ள கட்டில் மற்றும் பீரோ உள்ளிட்ட அனைத்துப் பொருட்களையும் நாசமாக்கியது. குறிப்பாக அந்த அறையில் உள்ள ஏசியில் மின்கசிவு ஏற்பட்டதுதான் இந்த தீ விபத்திற்கு காரணம் என்று சொல்லப்படுகிறது. ஐந்து தீயணைப்பு வாகனங்கள் வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றன.

மேலதிக தகவல்களுக்கு கீழே உள்ள சுட்டியினைச் சொடுக்கவும்!

Exit mobile version