பிரான்ஸ் தலைநகர் பாரீசில் உள்ள 850 ஆண்டுகள் பழமையான தேவாலயத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் அதன் கோபுரம் சரிந்து விழுந்தது.
உலகிலேயே ஐரோப்பிய கட்டிட கலையை பறைசாற்றும் வகையில் கட்டப்பட்டிருந்த இந்த தேவாலயத்தில் தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக தேவாலயத்தில் இருந்த வழிபாட்டு சிலைகள் பத்திரமாக மீட்கப்பட்டன. தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் 7 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
தீ தேவாலயம் முழுவதும் பரவியதால் மேற்கூரை மற்றும் கோபுரம் முற்றிலும் எரிந்து சரிந்து விழுந்தது. இதில் மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த தீயணைப்பு வீரர் ஒருவர் காயமடைந்தார்.
Discussion about this post