உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தை கட்டுப்படுத்தும் பணி முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நொய்டாவில் உள்ள மெட்ரோ மருத்துவமனையில் ஏற்பட்ட தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். தீயணைப்பு வாகனங்கள் அதிகளவில் வரவழைக்கப்பட்டுள்ளன. மருத்தவமனையில் இருந்து கரும்புகை வெளியேறி வருகிறது. தீ விபத்து பரவிய அறைகளில் இருந்த நோயாளிகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு வருகின்றனர்.
Discussion about this post